வார வாரம் புது புது படங்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த வாரம் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படம் ஆஹா ஓடிடியில் வெளியாகி உள்ளது. தயால் பத்மநாபன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ஆரவ், சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, யாசர், விவேக் ராஜகோபால், அமித் பார்கவ், சுப்ரமணிய சிவா, யாஷ் ஷெட்டி, ரவி வெங்கட்ராமன், ஸ்ருதி நாயக், ஜோ சைமன், பாலாஜி, சந்திரா சூட் என பலர் நடித்துள்ளனர். மணிகாந்த் கத்ரி இசையமைக்க, தயால் பத்மநாபன் பாடல்கள் எழுதியுள்ளார்.
படத்தின் தொடக்கத்தில் மகத் இரவு வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு குழந்தையை ரவுடி கும்பல் கடத்திச் செல்வதை பார்க்கிறார், இதனை யாருக்கும் தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து அருகில் உள்ள மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் செய்கிறார். ஆனால் அந்த ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் ரவுடி கும்பலுடன் தொடர்புடையவர் என்பதால் மகத் அன்று இரவே கொலை செய்யப்படுகிறார். தனது நண்பனின் இறப்பிற்கு பழிவாங்க வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், யாசர் மற்றும் விவேக் ராஜகோபால் திட்டமிடுகின்றனர். ஆனால் அவர்களை வேறொரு கும்பல் கொலை செய்து விடுகின்றனர். பின்பு இறுதியில் என்ன ஆனது என்பதே பாரதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்தின் கதை.